ஆப்நகரம்

நட்புறவை விரிவாக்க ஆர்வமாக இருக்கிறேன்: மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி பதில்!

இந்தியா - இலங்கை இடையேயான நட்புறவை விரிவாக்கம் செய்ய தான் ஆர்வமாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

Samayam Tamil 24 Sep 2020, 6:23 pm
இலங்கை - இந்தியா இடையே காணொளிக் காட்சி வாயிலாக செப்டம்பர் 26ஆம் தேதி உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டின் போது, இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி இரு தரப்பு உறவு உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


காணொலி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையின் போது பிராந்திய ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை கட்டமைப்பது, இரு தரப்பு விவகாரங்கள் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்கக் கூடும் என தெரிகிறது.

இலங்கையில் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிந்த பிறகு முதல் முறையாக அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமான ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இருதரப்பு உறவின் பரந்த கட்டமைப்பை விரிவாக மறுஆய்வு செய்ய இரு தலைவர்களுக்கு இந்த உச்சிமாநாடு வாய்ப்பளிக்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அரசு அலுவலகத்துக்கு அதிபர் திடீர் விசிட்... திணறிப்போன அலுவலர்கள்!

இந்த நிலையில் இந்த மாநாடு குறித்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, “செப்டம்பர் 26 ஆம் தேதி திட்டமிடப்பட்ட மெய்நிகர் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியுடன் உரையாடுவதை எதிர்பார்க்கிறேன். அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிற விவகாரங்கள் தொடர்பான இரு தரப்புக்கு இடையிலான பன்முக உறவை மறுபரிசீலனை செய்ய எதிர்பார்க்கிறோம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, இருதரப்பு நட்புறவை விரிவாக்கம் செய்ய தான் ஆர்வமாக இருப்பதாகவும், கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் நமது கூட்டுறவை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளை நாம் ஆராயவேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி