ஆப்நகரம்

சிரிங்க மோடி ஜி: நெட்டிசன் அட்வைஸை ஏற்ற பிரதமர்

அடிக்கடி சிரிக்க வேண்டும் என்று ட்விட்டரில் ஒருவர் கூறிய வேண்டுகோளை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார்.

Samayam Tamil 22 Jul 2018, 2:02 pm
அடிக்கடி சிரிக்க வேண்டும் என்று ட்விட்டரில் ஒருவர் கூறிய வேண்டுகோளை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார்.
Samayam Tamil inshorts_image_1532233168578_331


ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் உலக அளவில் அதிகம் பேரால் பின்தொடரப்படும் தலைவர்களில் 3வது இடத்தில் இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி.

தனது கருத்துக்களை தொடர்ந்து ட்விட்டரில் எழுதி நெட்டிசன்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு ஒருவர் ட்விட்டரில் அறிவுரை வழங்கியுள்ளார்.

“அடிக்கடி சிரிங்க மோடி ஜி… மற்றபடி எல்லாம் ஓகேதான்” என்று அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, “உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். :)” என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி