ஆப்நகரம்

மோடிக்கு என் மேல் பயம், பொறாமை: கர்நாடக முதல்வர் சித்து

பிரதமர் நரேந்திர மோடி தன் செல்வாக்கைப் பார்த்து பயப்படுவதாகவும் சாதனைகளைக் கண்டு பொறாமைப்படுவதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.

TNN 31 Oct 2017, 12:39 pm
பிரதமர் நரேந்திர மோடி தன் செல்வாக்கைப் பார்த்து பயப்படுவதாகவும் சாதனைகளைக் கண்டு பொறாமைப்படுவதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil pm modi scared of me says cm siddaramaiah
மோடிக்கு என் மேல் பயம், பொறாமை: கர்நாடக முதல்வர் சித்து

கர்நாடக முதல் சித்தராமைய்யா திங்கட்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது பிரதமர் நரேந்தி மோடியை கடுமையாக தாக்கினார். மோடி தன்னை ஒவ்வொரு முறை கர்நாடகாவிற்கு வரும்போது தவறாமல் தன்னை விமர்சித்து வருகிறார் என்ற அவர், மோடி தன் செல்வாக்கைப் பார்த்து பயப்படுவதாகவும் சாதனைகளைக் கண்டு பொறாமைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

யார் ஆட்சியில் இருக்க வேண்டும். இருக்கக் வேண்டாம். என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நஞ்சங்கூடு இடைத்தேர்தலில் பொதுமக்கள் காங்கிரஸ் கட்சியையே ஆதரித்தார்கள். 2018ஆம் ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலிலும் அவர்கள் காங்கிரஸ் வெற்றியையே விரும்புகிறார்கள்." என்றும் அவர் தெரிவித்தார்.

மோடி அரசில் 8 அமைச்சர்கள் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 12 அமைச்சர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் ராஜினாமா செய்வார்களா? என்றும் சித்தராமைய்யா கேள்வி எழுப்பினார்.

அடுத்த செய்தி