ஆப்நகரம்

இனி இந்தியாவின் வளர்ச்சி புல்லட் வேகத்தில் செல்லும்: பிரதமர் மோடி!

புல்லட் ரயில் திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் பயன்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

TNN 14 Sep 2017, 10:57 am
ஆமதாபாத்: புல்லட் ரயில் திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் பயன்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil pm modi speech in bullet train inauguration function
இனி இந்தியாவின் வளர்ச்சி புல்லட் வேகத்தில் செல்லும்: பிரதமர் மோடி!


நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம் ஆமதாபாத் - மும்பை இடையே செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

அதில் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே கலந்து அடிக்கல் நாட்டினர். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய மோடி, குஜராத், மகாராஷ்டிரா மட்டுமல்ல; நாடே வளர்ச்சி அடைய புல்லட் ரயில் திட்டம் உதவும்.

இந்தியாவில் விரைவாக புல்லட் ரயில் கொண்டு வர உதவிய ஷின்ஷோ அபேவிற்கு நன்றி. நகரங்கள் இடையே அதிவிரைவு போக்குவரத்திற்கு புல்லட் ரயில் உதவும். மும்பை-ஆமதாபாத் இடையே 8 மணி நேர பயணம், 2 மணி நேரமாக குறையும்.

நாட்டின் வளர்ச்சியில் ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. 1964ஆம் ஆண்டு ஜப்பானில் புல்லட் ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. சர்வதேச நாடுகளுடன் வளர்ச்சியில் போட்டியிட புல்லட் ரயில் போன்ற நவீன சேவைகள் உதவும்.

புல்லட் ரயில் திட்டத்துக்கு மிகக் குறைந்த வட்டியில் கடன் தர ஜப்பான் முன்வந்துள்ளது. ரூ.88,000 கோடிக்கு 0.1% மட்டுமே வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழைகளும் நவீன போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த புல்லட் ரயில் திட்டம் உதவும்.

PM Modi speech in Bullet Train inauguration function.

அடுத்த செய்தி