ஆப்நகரம்

70வது Mann Ki Baat உரை: தூத்துக்குடி கடைக்காரருக்கு போன் போட்ட பிரதமர் மோடி!

மன் கி பாத் உரையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

Samayam Tamil 25 Oct 2020, 12:40 pm
ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையும் “மன் கி பாத்” என்ற வானொலி நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 70வது முறையாக இன்று “மன் கி பாத்” நிகழ்ச்சியில் பேசினார். அதில்,
Samayam Tamil Mann Ki Baat


* அனைவருக்கும் இனிய தசரா பண்டிகை வாழ்த்துகள். விழா காலத்தை ஒட்டி கடைகளுக்குச் சென்று அதிகளவில் பொருட்கள் வாங்க நேரிடும். அப்போது உள்நாட்டு தயாரிப்புகளா என்று தேடித் தேடி வாங்குங்கள்.

* கடந்த ஆண்டைப் போல் அல்லாமல் இம்முறை கொரோனா நோய்த்தொற்று காரணமாக பண்டிகைகள் களையிழந்து காணப்படுகின்றன. வைரஸ் பரவலைத் தடுக்க சில கடினமான முடிவுகளை நாம் எடுத்தே ஆக வேண்டும்.

* விரைவில் ஈத், சரத் பூர்ணிமா, வால்மீகி ஜெயந்தி, தீபாவளி, சாத் பூஜா, குரு நானக் தேவ் ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளன. எனவே உரிய கட்டுப்பாடுகளுடன் பண்டிகைகளை கொண்டாடி மகிழுங்கள்.

* ஊரடங்கு காலத்தில் சுகாதாரத்துறை பணியாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் நமக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். எனவே இந்த பண்டிகை காலத்தில் அவர்களையும் உடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

டிஆர்பி பண மோசடி: வசமா சிக்கிய முக்கிய நிர்வாகிகள் - அடுத்த ஷாக்!

* இந்த பண்டிகை நேரத்தில் நமது எல்லை வீரர்களை மறந்துவிடக் கூடாது. நமக்காக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். நமது பாரதத் தாயின் வீர மகன்கள் மற்றும் வீர மகள்களை பெருமைப்படுத்தும் வகையில் அனைவரது வீட்டிலும் விளக்கேற்றுங்கள்.

* தூத்துக்குடியை சேர்ந்த பொன்.மாரியப்பனை தொலைபேசியில் அழைத்து பேசிய பிரதமர் மோடி, சிறிய சலூன் கடை நடத்தி வரும் மாரியப்பன், அதன் ஒரு பகுதியை நூலகமாக மாற்றியுள்ளார். தான் கற்றதை மற்றவர்களும் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளார். இவரது கடைக்குச் சென்று ஒரு புத்தகத்தைப் படிக்கும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணத்தில் தள்ளுபடி வழங்குகிறார். இது உத்வேகம் ஊட்டும் முயற்சி. இந்த யோசனை எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பினார்.

* அதற்கு மாரியப்பன் பதிலளிக்கையில், நான் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். அதற்கு மேல் படிக்க முடியவில்லை. படித்தவர்களைப் பார்க்கும் போது ஏற்பட்ட ஏக்கம் தான் நூலகம் வைக்க காரணமாக இருந்தது. அதன்பிறகு எனது கடையில் இத்தகைய முயற்சி எடுத்தேன் என்று கூறினார்.

அடுத்த செய்தி