ஆப்நகரம்

PM Modi: வெள்ளச் சேதம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் விசாரித்த பிரதமர் மோடி!

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதம் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

Samayam Tamil 16 Aug 2018, 11:53 am
கொச்சின்: கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதம் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
Samayam Tamil Modi


கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பெருமழையைப் பதிவு செய்துள்ளது. இதனால் 14 மாவட்டங்களில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மாநிலத்தின் 35 அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மழை, வெள்ளப் பாதிப்புகளில் சிக்கி 73 பேர் உயிரிழந்துள்ளனர். 60,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து, முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால், நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு தமிழக முதலமைச்சர் பழனிசாமியிடம், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தினார்.

மழை பாதிப்புகளால் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை ரத்து செய்வதாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்த நெருக்கடியான நேரத்தில் மத்திய அரசு, கேரள மக்களுடன் உறுதியாக நிற்கும். மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று கூறினார்.

இந்நிலையில் இன்று காலை 2வது முறையாக பினராயி விஜயனை, மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது வெள்ளச் சேதங்கள் குறித்து கேட்டறிந்தார். தேவையான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தியதாக குறிப்பிட்டார். கேரள மாநில மக்களுக்காக பிரார்த்திப்பதாக மோடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

PM Modi spoke to Kerala CM Pinarayi Vijayan about flood situation.

அடுத்த செய்தி