ஆப்நகரம்

"ஹலோ கோத்தபாய ஹவ் ஆர் யூ" மோடி செய்த போன் கால்!

இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சவுடன் நாட்டுப் பிரதமர் மோடி தொலைப்பேசி வாயிலாக சில விஷயங்கள் குறித்து விவாதித்தனர்...

Samayam Tamil 23 May 2020, 9:39 pm
இந்திய பிரதமர் மோடி கொரோனா தொற்று தடுப்பு, மீட்புப் பணிகள் குறித்து பல்வேறு நாட்டுத் தலைவர்களோடு அவ்வப்போது தொலைப்பேசி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக இப்போது இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சவுடன் தொலைப்பேசியில் மோடி ஆலோசனை நடத்தினார்.
Samayam Tamil ஹலோ கோத்தபாய ஹெவ் ஆர் யூ மோடி செய்த போன் கால்!
"ஹலோ கோத்தபாய ஹெவ் ஆர் யூ" மோடி செய்த போன் கால்!


இந்த ஆலோசனை தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சவுடன் பிரதமர் மோடி கோவிட்-19 குறித்து ஆலோசனை நடத்தினார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தெற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினை, பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்டவற்றை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர்.

கச்சா எண்ணெய் உற்பத்தியைக் கெடுத்த கொரோனா!

இந்த உரையாடலின்போது இலங்கையில் மீண்டும் தொடங்கப்படவுள்ள பொருளாதார திட்டங்கள் குறித்து ராஜபக்ச தெரிவித்தார். அப்போது இரு தலைவர்களும் இந்தியாவின் துணையோடு இலங்கையில் நடக்கும் வளர்ச்சி பணிகளைத் துரிதப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து கருத்துப்பரிமாறிக் கொண்டனர்.

இலங்கை இயல்புக்குத் திரும்பும் வரை தன்னால் முடிந்த உதவியை இந்தியா வழங்கும் என்றும் மோடி தொலைப்பேசி உரையாடலின்போது இலங்கை அதிபரிடம் வழங்கியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி