ஆப்நகரம்

போதும்பா! சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேற நினைக்கும் மோடி...

ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட வலைத்தளங்களை விட்டு வெளியேற நினைத்ததாக பிரதமர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது தற்போது ட்ரெண்டாகியுள்ளது.

Samayam Tamil 2 Mar 2020, 9:40 pm
உலக அளவில் ட்விட்டரில் அதிகபடச்ச பின்தொடர்பாளர்களை கொண்டிருப்பவர் பிரதமர் மோடி. தற்போது அவரை 53.3 மில்லியன் பேர் தொடர்கின்றனர். அதுமட்டுமில்லாமல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைத்தளங்களிலும் அவரை பல லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
Samayam Tamil சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேற நினைக்கும் மோடி


சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் மோடி அரசியல் அப்டேட்டுகள் மட்டுமில்லாமல் தான் கலந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகளில் இடம்பெறும் சுவாரசிய நிகழ்வுகளை புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து வருவது வழக்கம். அதே சமயம் நெட்டிசன்களால் தான் எப்படியெல்லாம் கிண்டல் அடிக்கப்படுகிறோம் என்பதும் அவருக்கு தெரிந்ததுதான்.



சமீபத்தில்கூட சூரியன் கிரகணத்தை தொலைநோக்கியின் மூலம் பார்த்த அவர் அந்த நிகழ்வினை புகைப்படமாக எடுத்து பதிவிட்டார். அப்போது இந்த படத்துக்கு மீம்ஸ்களை எதிர்பார்க்கிறேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

நிர்பயா வழக்கு: நாளை தூக்கிலிருந்து தப்பிய குற்றவாளிகள்..!

இந்த நிலையில் அவர் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து விலகுவது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நினைத்ததாக ட்வீட் செய்துள்ளார். இந்த பதிவு ட்விட்டர் வாசிகளிடையே பெறும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அடுத்த செய்தி