ஆப்நகரம்

முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை

கொரோனா பாதிப்பு மற்றும் மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் கானொளி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்

Samayam Tamil 1 Apr 2020, 2:40 pm
டெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர வருகிற 14ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி, ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்து அனைத்து மாநிலங்களும் தீவிரமாக பின்பற்றி வருகின்றன.

எனினும், கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் மட்டும் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1600ஐ தாண்டியுள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு: ராமதாசு எச்சரிக்கை!

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கானொளி காட்சி மூலம் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையின் போது, கொரோனா பாதிப்பு மற்றும் மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் கேட்டறிவார் என தெரிகிறது.

முன்னதாக, கடந்த மாதம் 20ஆம் தேதியன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தெடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தின் சார்பில் முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி