ஆப்நகரம்

இயேசுவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!!

நாடு முழுவதும் இருக்கும் கிறிஸ்துவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 Apr 2020, 12:02 pm
இன்று புனித வெள்ளி நாடு முழுவதும் கிறிஸ்துவ மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களை, சிலுவையில் அறைந்த துயரங்களை நினைவுகூறும் வகையில் கிறிஸ்துவர்கள் இன்றைய நாளை புனித வெள்ளியாக கொண்டாடுகின்றனர்.
Samayam Tamil பிரதமர் மோடி


கிறிஸ்துவர்களின் முக்கிய வழிபாடுகளில் ஒன்றான புனித வெள்ளி, இயேசு உயிர்பெற்று எழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் நிகழும். இன்றைய நாளில் கிறிஸ்துவ கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும்.

PM Modi: பிரதமர் மோடி ஏன் விளக்கு ஏற்றச் சொன்னார்? : நவகிரகங்கள் அடங்கிய விளக்கின் தத்துவம்

இதை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து இருக்கும் பிரதமர் மோடி, ''கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மக்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டவர். அவரது நீதியும், தைரியமும் தனித்து நிற்கிறது. அதேபோன்று அவரது நீதிக்கான உணர்வும் நிற்கிறது.
காட்டு வழியில் 1400 கி.மீ. த்ரில் பயணம்: மகனுக்காக தாய் செய்த சாகசம்
புனித வெள்ளி நாளில் அவரது சேவையை, உண்மையை, நேர்மையை, நீதியை நினைவில் கொள்வோம்'' என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி