ஆப்நகரம்

கண்டுபிடிப்பு ஏழைகளுக்கு கை கொடுக்க வேண்டும்: மோடி

புதிய கண்டுபிடிப்புகள் ஏழைகளுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் மோடி வலியறுத்தியுள்ளார்.

Samayam Tamil 25 Feb 2018, 8:03 pm
புதிய கண்டுபிடிப்புகள் ஏழைகளுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் மோடி வலியறுத்தியுள்ளார்.
Samayam Tamil pm modis 41st mann ki baat highlights
கண்டுபிடிப்பு ஏழைகளுக்கு கை கொடுக்க வேண்டும்: மோடி


மனதின் குரல் என்ற மாதாந்திர வானொலி நிகழ்ச்சியில் 41வது முறையாக பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் குப்பைகள் மூலம் பல பொருட்களைத் தயாரித்து காட்சிப்படுத்தியதுடன் மறுசுழற்சி முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தய ஜார்க்கண்ட் குப்பைத் திருவிழாவிற்கு பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "பாஸ்கரா, பிரம்மகுப்தா, ஆர்யபட்டா போன்ற சிறந்த கணித மேதைகள், சி.வி.ராமன், ஜக்தீஷ் சந்திர போஸ், சத்யேந்திரநாத் போஸ் போன்ற சிறந்த அறிவியலாளர்கள் தோன்றிய பெருமை மிக்க நாடு இந்தியா. இந்தியாவின் கண்டுபிடிப்புகள அனைத்தும் ஏழைகளுக்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும். செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் கண்டுபிடிப்புகள் பற்றி கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

வரும் மாதம் 2ஆம் தேதி கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த மோடி, "ஹோலிப் பண்டிகையில் வண்ணங்களுக்கு எத்தனை முக்கியத்துவம் இருக்கிறதோ, அத்தனை முக்கியத்துவம் ஹோலிகா தகனத்திற்கும் இருக்கிறது. ஏனென்றால், இந்த நாளன்று தான், நாம் தீமைகளையெல்லாம் நெருப்பினில் இட்டுப் பொசுக்குகிறோம். அனைத்து கருத்து வேறுபாடுகளையும் மறந்து, ஒருவர் மற்றவரின் சந்தோஷத்தில் பங்கெடுத்து, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை முன்னிறுத்தும் மங்கலமான தருணம் இது." என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி