ஆப்நகரம்

மோடியின் 103 வயது சகோதரி மரணம்

பிரதமர் நரேந்திர மோடியின் ராக்கி சகோதரி ஸ்ரபதி தேவி 103 வயதில் காலமானார்.

Samayam Tamil 11 Mar 2018, 2:41 pm
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் ராக்கி சகோதரி ஸ்ரபதி தேவி 103 வயதில் காலமானார்.
Samayam Tamil pm modis rakhi sister sharbati devi passes away aged 103
மோடியின் 103 வயது சகோதரி மரணம்


2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்ரபதி தேவி என்ற மூதாட்டி ராக்கி கட்டினார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தன் சகோதரர் நினைவாக பிரதமருக்கு ராக்கி கட்ட வேண்டும் என்று அவர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதனையடுத்து, மோடியின் அழைப்பை ஏற்று ரக்ஷா பந்தன் நாளில் பிரதமர் இல்லத்திற்கு சென்ற ஸ்ரபதி தேவி பிரதமருக்கு ராக்கி கட்டினார்.

103 வயதான ஸ்ரபதி ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் மரணம் அடைந்தார். இன்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடக்கிறது.

அடுத்த செய்தி