ஆப்நகரம்

Eid ul Fitr: இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து!

நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடியும் இஸ்லாமிய மக்களுக்கு தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

Samayam Tamil 16 Jun 2018, 10:39 am
நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடியும் இஸ்லாமிய மக்களுக்கு தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
Samayam Tamil pm-narendra-modi-759
இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து!


நாடு முழுவதும் உள்ள அனைத்து இஸ்லாமிய மக்களாலும், ரமலான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகை பெருநாளை முன்னிட்டு அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. ‘ஈத்கா’ எனும் திறந்தவெளி தொழுகையும் நடைபெற்றது. தொழுகை நிறைவுற்றதும் மக்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.


இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பக்கத்தின் வாயிலாக, இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் நமது சமூகத்தின் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் பிணைப்பு இந்த நாளில் மேலும் பலப்படட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி