ஆப்நகரம்

ஜம்மு காஷ்மீர் பதட்டம்: பிரதமர் ஆலோசனை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்து வரும் தொடர் வன்முறைகள் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட முக்கய அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

TOI Contributor 12 Jul 2016, 11:57 am
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்து வரும் தொடர் வன்முறைகள் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட முக்கய அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். #WATCH PM Narendra Modi holds a meeting on law & order situation in Jammu and Kashmir, meeting underway.https://t.co/gmItUgKQEf— ANI (@ANI_news) July 12, 2016 கடந்த நான்கு நாட்களாக ஆப்ரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்த பிரதமர் மோடி இன்று டெல்லி வந்து சேர்ந்தார். வந்தவுடன், ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்தும், எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Samayam Tamil pm narendra modi holds a meeting on law order situation in jammu and kashmir
ஜம்மு காஷ்மீர் பதட்டம்: பிரதமர் ஆலோசனை


ஜம்மு காஷ்மீர் பதட்டத்தை அடுத்து தனது அமெரிக்க பயணத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒத்தி வைத்தார். ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாதி புர்ஹான் வானி கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கலவரக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடக்கும் மோதலில் 32 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து இன்றும் 4வது நாளாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது.

பெரும்பாலான இடங்களில் அரசு பஸ்கள் இயங்கவில்லை. சில இடங்களில் மட்டும் தனியார் வாகனங்கள் மட்டும் இயங்கி வருகின்றன. கடைகள் மற்றும் வர்த்த நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பேச்சு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ''இந்திய ராணுவம் காஷ்மீர் பகுதி வாழ் மக்களை கொலை செய்வது வருந்தத்தக்கது'' என்று நவாஸ் கூறியதாக அந்த நாட்டு வானொலி செய்தி ஒளிபரப்பியுள்ளது.

அடுத்த செய்தி