ஆப்நகரம்

பாகிஸ்தானுடன் பேச்சுக்கு வாய்ப்பே இல்லை: சுஷ்மா திட்டவட்டம்

ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதிபட தெரிவித்துள்ளார்.

TOI Contributor 6 Jun 2017, 5:49 am
ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதிபட தெரிவித்துள்ளார்.
Samayam Tamil pm narendra modi nawaz sharif sco talks unlikely says sushma swaraj
பாகிஸ்தானுடன் பேச்சுக்கு வாய்ப்பே இல்லை: சுஷ்மா திட்டவட்டம்


ஷாங்காய் கூட்டமைப்பின் மாநாடு வரும் ஜுன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கஜகஸ்தான் நாட்டின் அஸ்டானா நகரில் நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியாவிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்.

இந்த மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பு ஒன்று திங்கட்கிழமை நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் வைத்து இரு தலைவர்களும் சந்திப்பது குறித்து பாகிஸ்தான் தரப்பிலிருந்தும் எந்த அழைப்பும் வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி 2015ல் பதான்கோட் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளிடையேயான உறவு மோசமடைந்துள்ளது. உரி தாக்குதல் உள்ளிட்ட தொடர் தாக்குதல்களால் பேச்சுவார்த்தைக்கே இடமில்லாத சூழல் நிலவுகிறது.

இருப்பினும், முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த தூக்குதண்டனையை ரத்து செய்வது தொடர்பாக பேசுவதற்காக இந்த சந்தர்ப்பத்தை பிரதமர் மோடி பயன்படுத்திக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சுஷ்மா இரு தலைவர்களும் சந்திக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது இந்த எதிர்பார்ப்பை குலைத்துள்ளது.

குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனை தொடர்பாக பேச இந்திய 16 முறை பாகிஸ்தான் அரசை தொடர்புகொள்ள முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி