ஆப்நகரம்

அதெல்லாம் இந்தியா வரமுடியாது! - திமிராக கடிதம் அனுப்பிய மோசடி மன்னன் நீரவ் மோடி

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டின் முக்கிய நபரான நீரவ் மோடியின் உறவினர் மெஹுல் சோச்சி இந்தியா திரும்ப முடியாது என கடிதம் அனுப்பியுள்ளார்.

Samayam Tamil 8 Mar 2018, 10:08 pm
புது டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டின் முக்கிய நபரான நீரவ் மோடியின் உறவினர் மெஹுல் சோச்சி இந்தியா திரும்ப முடியாது என கடிதம் அனுப்பியுள்ளார்.
Samayam Tamil nerav modi


பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12,700 கோடி அளவிற்கு சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இந்த வழக்கு குறித்து நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்சிக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

இதுகுறித்து மெயில் அனுப்பியுள்ள மெஹுல், “எனக்கு உடல்நிலை சரியில்லை. இப்போது தான் 6 மாதத்திற்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அதிக தூரம் பயணிக்க முடியாது. அதோடு என் பாஸ்போர்ட் வேறு முடக்கப்பட்டுள்ளது. என்னால் இப்போதைக்கு இந்தியா வர முடியாது” என அனுப்பியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இங்கு நிறைய வேலைகள் இருப்பதாக கூறியுள்ளார். நீரவ் மோடியும் இதே பதிலைத்தான் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி