ஆப்நகரம்

பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் தோல்வி: இஸ்ரோவுக்கு ஏமாற்றம்

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் விண்கலத்துடன் பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

TNN 31 Aug 2017, 7:45 pm
ஸ்ரீஹரிகோட்டா: ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் விண்கலத்துடன் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட்டின் பயணம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Samayam Tamil polar rocket of isro carrying indias latest navigation satellite lifts off from spaceport of sriharikota
பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் தோல்வி: இஸ்ரோவுக்கு ஏமாற்றம்


கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான ஏழு செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது. இதன்படி அந்த செயற்கைக்கோள்களைத் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த திட்டத்தில் முதலில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோளின் ஆயுள்காலம் நிறைவடைந்துவிட்டது. இதனையடுத்து, புதிதாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–எச் என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது.

இந்த செயற்கைக்கோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று இரவு 7 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. இதற்கான 29 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பிற்பகல் 1.59 மணிக்குத் தொடங்கியது.

இதன்படி, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் விண்கலத்தை ஏந்திய பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டின் பயணம் தோல்வி அடைந்துவிட்டதாக இஸ்ரோவின் தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார். வெப்பத் தடுப்பு சரியாக பிரியாததால் ராக்கெட் தோல்வி அடைந்து என்றும் தோல்விக்கான காரணங்கள் குறித்து மேலும் ஆராயப்படும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
#FLASH ISRO chairman A S Kiran Kumar says navigation satellite IRNSS-1H mission from Andhra Pradesh's Sriharikota was unsuccessful pic.twitter.com/jL2B1Z8BfL — ANI (@ANI) August 31, 2017 முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைகோள் மூலம் இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி