ஆப்நகரம்

சிறந்த காவலர் விருது பெற்ற மோப்ப நாய்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மோப்ப நாய் ஒன்றுக்கு முதன் முறையாக சிறந்த காவலர் விருது வழங்கி கவுரவிக்கப்படுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது

Samayam Tamil 17 Dec 2020, 8:26 pm
முன்னொரு காலத்தில் ஒரு ராஜா வாழ்ந்தார். அவர் விரும்பிய ஒரு வெள்ளித் தட்டை அவரது குடும்பத்தினர் அவரது மறைவுக்கு பிறகும் பல தசாப்தங்களாக பொக்கிஷமாக பாதுகாத்து வந்தனர். ஒரு நாள் அந்த தட்டு திருட்டப்பட்டதால் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால், போலீஸ் நாய் ஒன்று எதையும் கொண்டு வரும் அலாவுதீன் பூதம் போல், அந்த தட்டை மீண்டும் கண்டுபிடித்து அரண்மனையில் சேர்த்தது. அதன்பிறகு அக்குடும்பத்தினர் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
Samayam Tamil மோப்ப நாய் ரூபி
மோப்ப நாய் ரூபி


இது கதை அல்ல. உண்மையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம். அம்மாநிலத்தில் உள்ள சாரங்கர் ராஜ் மஹாலில், சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த இரண்டு வெள்ளி தட்டுகள் திருடப்பட்டன. அந்த தட்டு ரூபி எனும் போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது. இதுமட்டுமல்ல இன்னும் பல குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறிய ஜெர்மன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்த ரூபி எனும் இந்த 4 வயதான பெண் மோப்ப நாய் அதன் பயிற்சியாளரும், காவலருமான வீரேந்திர ஆனந்த் உடன் இணைந்து உதவியுள்ளது.

இந்த நிலையில், மோப்ப நாய் ரூபிக்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் இந்த மாதத்துக்கான சிறந்த காவலர் விருதை விருதை வழங்கி அம்மாநில காவல்துறை கவுரவித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு அந்த மாதத்தின் காவலர் என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. அவர்களின் புகைப்படங்கள் வெவ்வேறு காவல் நிலையங்களில் வைக்கப்பட்டு ஊக்கமளிக்கப்படுகிறார்கள்.

'பகைவனுக்கு அருள்வாய்' அப்டேட் - சபாஷ் போடவைக்கும் புதிய முயற்சி!

அந்த வகையில், நவம்பர் மாதத்துக்கான சிறந்த காவலர் விருதானது ரூபி மோப்ப நாய், அதன் பயிற்ச்சியாளர் வீரேந்திர ஆனந்த் மற்றும் ஒரு சட்டம் ஒழுங்கு பிரிவை சேர்ந்த காவலர் ஒருவர் என மூன்று பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. “முதன்முறையாக ஒரு போலீஸ் மோப்ப நாய்க்கு சிறந்த காவலர் விருது வழங்கப்பட்டுள்ளது” என்று ராய்கார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி