ஆப்நகரம்

மகள் கண்முன் தந்தையை சுட்ட போலீஸ்: போராட்டக் களத்தில் கொடூரம்!

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது.

Samayam Tamil 23 Dec 2019, 9:51 am
மாணவர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் என பலதரப்பினரும் பல்வேறு மாநிலங்களில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடுவர்கள்மீது காவல்துறை கடும் தாக்குதல் நடத்துகிறது. காவல்துறை நடத்தும் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
Samayam Tamil மகள் கண்முன் தந்தையை சுட்ட போலீஸ்


கர்நாடக மாநிலம் மங்களூரில் மகளின் கண்முன்னே போலீஸார் தந்தையை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் மீண்டும் ஒரு பயங்கரம்; பற்றி எரிந்த தீயில் பலர் பலியான சோகம்!

மங்களூரில் உள்ள பந்தர் பகுதியில் வசித்து வந்தவர் ஜலீல் (42). இவருக்கு ஷிஃபானி என்ற 14 வயது மகளும் சபில் என்ற 10 வயது மகனும் உள்ளனர். தினக் கூலியான ஜலீல் வெள்ளிக்கிழமை அன்று பள்ளி சென்ற தனது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துவந்தார்.

ஜார்க்கண்ட் தேர்தல்: முந்தும் காங்கிரஸ், பிந்தும் பாஜக!

அப்போது வீட்டு வாசலுக்கு வந்த அவரை போலீஸார் சுட்டதில் அவரது இடது கண்ணில் புல்லட் துளைத்தது. இதனால் அவர் துடிதுடித்து சரிந்து விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

“என் அப்பாவை என் கண் முன்னே போலீஸ்காரர்கள் சுட்டுக்கொன்றுவிட்டனர்” என ஷஃபினா அழுதபடி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். போராட்டத்தில்கூட கலந்துகொள்ளாத அவரை போலீஸ் சுட்டுக்கொன்று ஒரு குடும்பத்தையே அனாதையாக்கியுள்ளது என அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

MK Stalin: போலீஸ் தடை; நீதிமன்றம் கெடுபிடி- பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்திற்கு தயாரான திமுக!

சம்பவம் நடைபெற்றபோது 50 முதல் 100 பேருக்குள்ளாகவே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தை கலைக்க வேண்டும் என்றால் போலீஸார் எளிதாக கலைத்திருக்க முடியும், ஏன் துப்பாக்கிச் சூட்டை அரங்கேற்றினர் என்பது தெரியவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி