ஆப்நகரம்

ஜாமியா பல்கலை. வன்முறை: 70 பேரின் புகைப்படங்களை வெளியிட்டது காவல் துறை

காவல்துறையும் வன்முறையைக் கட்டவிழ்த்தது என்ற நிலையில், காவல்துறையே தற்போது வன்முறை செய்தவர்கள் என்ற பட்டியலை வெளியிட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ​​

Samayam Tamil 30 Jan 2020, 9:54 am
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழகம் அருகே நடந்த போராட்டத்தில் கடுமையான வன்முறை வெடித்தது. இதுகுறித்து டெல்லி போலீசார் தீவ்ர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்ட 70 பேரின் புகைப்படங்களை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil jamia violence


காவல்துறையும் வன்முறையைக் கட்டவிழ்த்தது என்ற நிலையில், காவல்துறையே தற்போது வன்முறை செய்தவர்கள் என்ற பட்டியலை வெளியிட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிஏஏ-வுக்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழகம் அருகே கடந்த டிசம்பர் 15-ம் தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீஸார் நுழைந்து தடியடி நடத்திய பிறகுதான் பல்கலைக் கழக வளாகம் போர்க்களமாக மாறியது.

ஜாமியா பல்கலைக்கழகத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் ஆய்வு

பல்கலைக்கழகம் அருகே நடந்த வன்முறை தொடர்பாக வெவ்வேறு காவல் நிலையத்தில் 2 வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

சட்ட விரோதமாக கூட்டம் கூடுதல், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல், தீவைத்தல் உள்ளிட்ட குற்றங்களை இழைத்ததாக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வன்முறை தொடர்பாக 70 பேரின் புகைப்படங்களை போலீஸார் நேற்று வெளியிட்டனர். மேலும் இவர்களை அடையாளம் காட்டவல்ல நபர்கள் - யாரென்று அறிந்தவர்கள் - தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என போலீஸார் கூறியுள்ளனர்.

இதற்காக 2 பிரத்யேகத் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி