ஆப்நகரம்

Delhi Election verdict: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தலைவர்கள் வாழ்த்து... மோடி சொன்னது என்ன?

டெல்லிக்கு மீண்டும் ராஜாவாகும் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 11 Feb 2020, 8:30 pm
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil political leader wishes arvind kejriwal for his victory in delhi assembly election
Delhi Election verdict: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தலைவர்கள் வாழ்த்து... மோடி சொன்னது என்ன?


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ள வாழ்த்தில், " வெறுப்பு மற்றும் பிரித்தாளும் அரசியல் செய்வோருக்கு எதிராக டெல்லி மக்கள் நல்ல தீர்ப்பை தந்துள்ளனர். வளர்ச்சி முன்வைத்து ஆட்சி செய்பவர்களுக்குதான் வெற்றி என்பதை ஆம் ஆத்மி கட்சி மீண்டும் நிரூபித்துள்ளது" எனக் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், " டெல்லி மக்கள் வளர்ச்சி சார்ந்த அரசியலுக்கு முன்னுரிமை கொடுத்து, ஆம் ஆத்மி கட்சியை வெற்றியடைய செய்துள்ளனர். டெல்லி மக்களை போன்றே நேர்மைக்கும், வளர்ச்சிக்கும் தமிழக மக்களும் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

ஸ்டாலின் வாழ்த்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்று, அங்கு மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள ஆத் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துகள். மதவாத அரசியலுக்கு எதிராக டெல்லி மக்கள் நல்லதொரு தீர்ப்பை அளித்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

பிகார் முதல்வர் நிதீஷ் குமார்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பெற்றுள்ள வெற்றி குறித்து, பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் கூறும்போது, "ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள்" என தமது கருத்தை சுருக்கமாக முடித்துக் கொண்டார். இவரது தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி அமைத்து டெல்லி தேர்தலை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கெஜ்ரிவாலுக்கு மோடி வாழ்த்து

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "டெல்லி மாநில மக்களின் விருப்பங்களை, ஆம் ஆத்மி அரசு நிறைவேற்ற வேண்டும் என, அக்கட்சியினரையும், அரவிந்த் கெஜ்ரிவாலையும் வாழ்த்துகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி