ஆப்நகரம்

ஆந்திர முதல்வரை முகநூலில் இழிவுபடுத்திய நபருக்கு வலைவீசிய போலீஸார்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகனும், எம்.எல்.ஏவுமான நாரா லோகேஷை, பொலிடிகல் பன்ச் (Political Punch) என்ற முகநூல் மூலம் இழிவு படுத்தியதாக, முகநூலின் நிர்வாகி கைது செய்ய போலீஸார் தேடி வருகின்றனர்.

TNN 21 Apr 2017, 6:46 pm
அமராவதி : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகனும், எம்.எல்.ஏவுமான நாரா லோகேஷை, பொலிடிகல் பன்ச் (Political Punch) என்ற முகநூல் மூலம் இழிவு படுத்தியதாக, முகநூலின் நிர்வாகி கைது செய்ய போலீஸார் தேடி வருகின்றனர்.
Samayam Tamil political satirist arrested by ap police in hyderabad
ஆந்திர முதல்வரை முகநூலில் இழிவுபடுத்திய நபருக்கு வலைவீசிய போலீஸார்


ஆந்திரா அரசியல் குறித்து விமர்சனம் செய்யும் முகநூல் பக்கமாக பொலிடிகல் பன்ச்என்ற பக்கத்தை இந்துரி ரவி கிரண் என்பவர் நிர்வகித்து வருகின்றார். இதில் பல அரசியல் விமர்சனங்களும், அரசியல் தலைவர்களை கிண்டல் செய்யும் படங்களையும் பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகனும், கிராம வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நாரா லோகேஷை கிண்டல் செய்து பொலிடிகல் பன்ச்பக்கத்தில் அண்மையில் ஒரு பதிவை வெளியிடப்பட்டிருந்தது.

இதில், லோகேஷ்க்கு ஆந்திர சட்டமன்றத்தில் உள்ள மொத்த எம்.எல்.ஏ எண்ணிக்கை கூட தெரியாமல் நாங்கள் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார். ஆனால் ஆந்திராவில் மொத்தமே 175 தொகுதி தான் உள்ளது. இது கூட தெரியாமல் அமைச்சராக உள்ளார் என கிண்டல் செய்து கருத்து சித்திரம் வெளியிட்டிருந்தனர்.

இந்த சித்திரத்தில், தெலுங்கு தேச கட்சி தலைவர்கள்,முதல்வர் மற்றும் அவரது மகன் குறித்து கிண்டல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொலிட்டிகல் பன்ச்முகநூல் பக்கத்தின் மீது,தெலுங்கு தேச கட்சியின் சார்பாக துள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொலிடிக்கல் பன்ச்முகநூல் பக்கத்தின் நிர்வாகி உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

அடுத்த செய்தி