ஆப்நகரம்

கர்நாடகா வழியாக செல்லும் நதிக்கு கன்னடர்களுக்கு உரிமை உண்டு - பிரகாஷ் ராஜ் பேச்சு

கோவா அரசு, கர்நாடகாவுக்கு தண்ணீர் தரவில்லை என கூறி இன்று கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பெங்களூரு உட்பட பல்வேறு முக்கிய நகரங்கள் முடங்கின.

Samayam Tamil 25 Jan 2018, 11:32 pm
பெங்களூரு : கோவா அரசு, கர்நாடகாவுக்கு தண்ணீர் தரவில்லை என கூறி இன்று கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பெங்களூரு உட்பட பல்வேறு முக்கிய நகரங்கள் முடங்கின.
Samayam Tamil prakash raj wades into mahadayi river row says we kannadigas have right to the water
கர்நாடகா வழியாக செல்லும் நதிக்கு கன்னடர்களுக்கு உரிமை உண்டு - பிரகாஷ் ராஜ் பேச்சு


காவிரி நதிநீர் தருவதில் எப்படி கர்நாடக அரசுக்கும், தமிழகத்திற்கும் இடையே பிரச்னை நீடித்து வருகின்றதோ, அதே போல கோவாவிலிருந்து, வட கர்நாடகாவில் பாயும் மகதாயி நதிநீர் பங்கீடு பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றது.

இதுகுறித்து பிரகாஷ் ராஜ் பேசியதாவது :
மகதாயி நதிநீரை கர்நாடகாவுக்கு பங்கீட்டு கொடுக்க முடியாது என கோவா அரசு சொல்வது ஏற்க முடியாது. கர்நாடகா வழியாக செல்லும் எல்லா நதிக்கும், கர்நாடகா மக்களுக்கு முழு உரிமை உள்ளது என போராட்டத்திற்கு பிரகாஷ் ராஜ் முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதே போல் காவிரி நீர் பங்கீடு விஷயத்தில் பிரகாஷ் ராஜ் என்ன நிலைப்பாட்டுடன் உள்ளார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அடுத்த செய்தி