ஆப்நகரம்

சட்டப்பிரிவு 370 ரத்து - குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் கூடிய அரசாணை வெளியீடு!

குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் கூடிய ஆணையை, அரசிதழில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டது.

Samayam Tamil 7 Aug 2019, 2:47 pm
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 35ஏ ஆகியவற்றை மத்திய அரசு ரத்து செய்தது. இதையொட்டி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Samayam Tamil Ram Nath Kovind


முன்னதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதாவிற்கு ஒப்புதல் பெற்றுள்ளனர். இதையடுத்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்தார்.

Also Read: 17 ஆண்டுகளில் இல்லாத சிறப்பு - நாடாளுமன்றக் கூட்டத் தொடரை இப்படி புகழக் காரணம் என்ன?

அதில் சிறப்பு சட்டப்பிரிவுகள் ரத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது, காஷ்மீரில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு ஆகியவை அடங்கும்.

Also Read: முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்!

இந்த மசோதாக்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இதனால் மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. இருப்பினும் வாக்கெடுப்பின் மூலம் அனைத்து மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து மக்களவையில் ஜம்மு காஷ்மீர் மீதான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இங்கு பாஜக அரசிற்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தால் எளிதாக நிறைவேற்றம் செய்யப்பட்டன.

Also Read: டிரெண்டாகும் #shameoncongress; காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடுதான் என்ன?

இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன் கூடிய ஆணையை, அரசிதழில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிற மாநிலங்களில் என்னென்ன சட்டங்கள் அமலில் இருக்கின்றனவோ, அவை அனைத்தும் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களுக்கும் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

அடுத்த செய்தி