ஆப்நகரம்

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

Samayam Tamil 27 Sep 2018, 5:48 pm
இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு, புதிய தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
Samayam Tamil eb8e5ac98138bec4790f0979e196eec0
தேசிய மருத்துவ ஆணையம்- குடியரசு தலைவர் ஒப்புதல்


தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான முடிவுக்கு, அமைச்சரவை நேற்று அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நாட்டின் மருத்துவ சேவை மற்றும் மருத்துவ படிப்பிற்கான தரத்தை வளப்படுத்தும் நோக்கில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக நடைமுறைக்கு வரவுள்ள தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்கும் பணியில் நிதி அயோக் அமைப்பின் உறுப்பினரான வி.கே. பால் தலைமை வகித்துள்ளார்.

அவருக்கு கீழ் ஏழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, தேசிய மருத்துவ ஆணையத்திறான செயல்பாடுகளை வரையறுக்க உள்ளார்கள். எனினும் புதிய ஆணையம் அமையும் வரை இந்திய மருத்துவ கவுன்சில் பயன்பாட்டில் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அகில இந்தியாவிற்கான மருத்துவ பயன்பாடுகளை மேற்கொண்டு வரும் இந்திய மருத்துவ கவுன்சில் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி