ஆப்நகரம்

கோயில் சன்னதியில் கடவுள் சிலை மீது விழுந்து உயிரிழந்த அர்ச்சகர்- வீடியோ வெளியீடு

கடவுள் சன்னதியில் பூஜை செய்வதற்கு தயார் செய்து கொண்டிருந்த அர்ச்சகர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 Jun 2018, 2:36 am
கடவுள் சன்னதியில் பூஜை செய்வதற்கு தயார் செய்து கொண்டிருந்த அர்ச்சகர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil someshwarar-dies-inside-the-someshwar-temple
கோயில் சன்னதியில் அர்ச்சகர் மாரடைப்பால் உயிரிழப்பு


ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிரதிசிப்பெற்ற சோமேஷ்வரர் கோயில் பீமாவரம் என்ற பகுதியில் உள்ளது. பழங்கால கோயிலான இதில் அர்ச்சகராக இருந்தவர் ராமாராவ்.

நேற்று இவர் மூலவருக்கு பூஜை கைங்கர்யங்கள் செய்வதற்கு தயார் செய்து கொண்டிருந்த போது, திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். அருகிலிருந்த மற்றொரு அர்ச்சகர் ராமராவை எழுப்பி நிற்க வைத்தார்.

அதை தொடர்ந்து சில நொடிகளில் மீண்டும் ராமராவ் தடுமாற, கற்ப கிரகத்திலிருந்த மூலவர் சிலை மீ து விழுந்து உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அர்ச்சகர் ராமராவ் மரணமடைந்தது பிறகு தெரியவந்தது.

உயிரிழக்கும் சில நேரங்களுக்கு முன்பு ராமராவ்


இந்நிலையில், சோமேஷ்வரர் கோயிலின் கற்ப கிரகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், இந்த சம்பவங்கள் அனைத்தும் பதிவாகின. தற்போது அந்த காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், இந்தியா முழுவதும் இந்த சம்பவம் வைரலாகி பரவி வருகிறது. மரணமடைந்த அர்ச்சகர் ராமராவ், தீவிர சிவபக்தராக இருந்துள்ளார்.

பணி என்றில்லாமல், கோயில் பூஜைகளை மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் ராமராவ் செய்து வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் சோமஷ்வரர் மூலவர் மீது விழுந்து ராமராவ் உயிர் துறந்ததால், அவரது உடலை வணங்க பல்வேறு மக்கள் பீமாவரம் பகுதியில் குவிந்து வருகின்றனர்.

அடுத்த செய்தி