ஆப்நகரம்

பிஞ்சிலே பரவும் சாதியம்; தலித் பிள்ளைகளை ஒதுக்கும் ஆரம்ப பள்ளி மாணவர்கள்- பெரும் அதிர்ச்சி!

தலித் பிள்ளைகளுடன் உணவருந்துவதை தவிர்க்கும் வகையில், ஆரம்ப பள்ளி மாணவர்கள் நடந்து கொள்ளும் விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 29 Aug 2019, 11:28 pm
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் ஆரம்ப பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு பயிலும் சில மாணவர்கள், மதிய உணவு உண்பதற்கு வீட்டிலிருந்து தனியாக தட்டுகளை பள்ளிக்கு எடுத்து வருகின்றனர்.
Samayam Tamil UP School


ஏனெனில் அவர்கள் எஸ்.சி, எஸ்.டி, தலித் மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட விரும்புவது இல்லையாம். அப்பள்ளியை சேர்ந்த ஒரு மாணவர் கூறுகையில், பள்ளியில் வழங்கப்படும் தட்டில் யார் வேண்டுமானாலும் உணவு உண்ணலாம்.

எதுக்காக ”போரும் அமைதியும்” புத்தகம் வச்சிருக்கீங்க? தப்பாச்சே- நீதிபதி கேள்வியால் வெடித்த சர்ச்சை!

அதனால் நாங்கள் வீட்டில் இருந்து தனியாக தட்டை எடுத்து வருகிறோம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியர் பி.குப்தா கூறுகையில், இவ்வாறு மாணவர்கள் செய்யக் கூடாது என்று பலமுறை அறிவுறுத்தி விட்டோம்.

இந்தியாவை அச்சுறுத்தும் பாகிஸ்தான் கமாண்டோக்கள்...!!

ஆனால் யாரும் கேட்பது இல்லை. அனைத்து மாணவர்களையும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண வேண்டும் என்று கூறி வருகிறோம். ஆனால் நாங்கள் கிளம்பிய உடன், மேல் சாதி மாணவர்கள் தனியாக சென்று அமர்ந்து சாப்பிடுகின்றனர்.

ப. சிதம்பரம் கைது: ''குட் நியூஸ்"" என்று இந்திராணி முகர்ஜி வரவேற்பு!!

இப்படி சாதி பார்க்கும் பழக்கத்தை, அவர்கள் வீட்டில் இருந்து கற்றுக் கொண்டிருக்கலாம். அனைவரும் சமம் என்பதை பலமுறை எடுத்துரைத்து விட்டோம். ஆனால் மேல் சாதியை சேர்ந்த மாணவர்கள், கீழ் சாதி மாணவர்களிடம் இருந்து விலகி இருக்கவே விரும்புகின்றனர் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி