ஆப்நகரம்

மோடிக்கு புத்தி சொல்ல புதிய குழு

டெல்லியில் நடைபெற்ற தீனதயாள் உபாத்யாவின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சில முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார்.

TNN 25 Sep 2017, 8:19 pm
டெல்லியில் நடைபெற்ற தீனதயாள் உபாத்யாவின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சில முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார்.
Samayam Tamil prime minister constitutes economic advisory council to the prime minister eac pm
மோடிக்கு புத்தி சொல்ல புதிய குழு


வரும் 2018க்குள் அனைவருக்கும் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.16 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். புதிய திட்டத்தில் ஏழை மக்கள் ரூ.500 செலுத்தி மின்சாரம் பெறலாம். இதனை 10 மாத தவணையாகவும் செலுத்தலாம்.

இத்துடன் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றையும் மோடி உருவாக்கியுள்ளார். 5 பேர் கொண்ட இந்த குழுவிற்கு பிபேக் தேப்ராய், ரதன் வடால் ஆகியோர் நிரந்தர உறுப்பினர்கள். இவர்கள் இருவருமே நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர்கள் ஆவார். பிபேக் தேப்ராய் இக்குழுவின் தலைமை வகிப்பார். ரதன் வாடல் முதன்மை ஆலோசகராக இருப்பார். இவர்கள் தவிர, சுர்ஜித் பல்லா, ரதின் ராய், அஷிமா கோயல் ஆகிய மூவரும் பகுதி உறுப்பினர்கள்.

பொருளாதார கொள்கைகள் குறித்த ஆலோசனைகள் வழங்குவது இந்தக் குழுவின் முக்கியமான பணியாக இருக்கும். நாட்டின் நிதி அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தும் நோக்கி இக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

அடுத்த செய்தி