ஆப்நகரம்

பிரதமர் மோடி இன்று பிரஸ்ஸல்ஸ் பயணம்

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் நடக்கவுள்ள 13-வது இந்திய-ஐரோப்பிய யூனியன் மாநாட்டுக்கு இன்று பிரதமர் மோடி செல்கிறார்

TNN 29 Mar 2016, 9:51 am
டெல்லி: பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் நடக்கவுள்ள 13-வது இந்திய-ஐரோப்பிய யூனியன் மாநாட்டுக்கு இன்று பிரதமர் மோடி செல்கிறார்.
Samayam Tamil prime minister modi to visit brussels today
பிரதமர் மோடி இன்று பிரஸ்ஸல்ஸ் பயணம்


பிரதமர் நரேந்திர மோடி இன்று பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் சென்று, பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேலை சந்திக்கிறார். இதனையடுத்து, இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். இதன் பின்னர் வாஷிங்டன்னில் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ள அணு பாதுகாப்பு மாநாட்டுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

மேலும், சவுதி அரேபியாவுக்கு வரும் ஏப்ரல் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்

கடந்த 22-ஆம் தேதியன்று பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் நடந்த குண்டுவெடிப்பில் 35-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் உரையாடிய இந்திய வெளியுறவு துறை முக்கிய அதிகாரி விகாஸ் ஸ்வரூப் கூறுகையில், "பிரஸ்ஸல்ஸ் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்தும், இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது" என்று தெரிவித்திருந்தார்.

அடுத்த செய்தி