ஆப்நகரம்

உ.பி.யில் பேருந்து விபத்து: 17 பேர் பலி, 35 பேர் காயம்

உத்தரப் பிரதேசத்தில் தனியார் பேருந்து விபத்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

Samayam Tamil 13 Jun 2018, 8:38 am
உத்தரப் பிரதேசத்தில் தனியார் பேருந்து விபத்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil mainpuri-bus-accident_625x300_1528858189337


உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரியில் வேகமாக சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று சாலையைப் பிரிக்கும் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 35 பேர் வரை காயமடைந்திருக்கின்றனர் என்று முதல் கட்டத் தகவலில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த பேருந்து ஓட்டுநர் உட்பட அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி