ஆப்நகரம்

அட்டூழியங்களை நிறுத்த என்ன செய்யப்போகிறது உ.பி. அரசு- பிரியங்கா காந்தி கேள்வி

உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவோ பகுதியைச் சேர்ந்த, பாலியல் பாதிப்புக்குள்ளான இளம் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக் காட்டி தனது ட்விட்டரில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 7 Dec 2019, 1:54 pm
நாளொன்றுக்குச் சராசரியாக 92 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இந்தியாவில் நடைபெறுகின்றன என்கிறது அண்மையில் வெளியான தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக அறிக்கை (என்.சி.ஆர்.பி ரிப்போர்ட் 2017 ). இந்த நிலை மாற வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தாலும், மாற்றுவதற்கான நடவடிக்கைகள் குறைவாகவே இருக்கின்றன என்பதே களநிலவரமாக இருக்கிறது.
Samayam Tamil priyanka vs yogi


காஞ்சிபுரம் , ஹைதரபாத் , உ.பி உன்னாவ் என கடந்த 4 நாட்களாக நாடெங்கிலும் அதிர்வலைகளை கிளப்பியுள்ள சம்பவங்கள் பெண்களுக்கெதிரான குற்றங்களே. அதே சமயம் பெண்களுக்கெதிரான குற்ற்றங்களில் கவனத்துக்கு வராத குற்றங்கள்தான் எப்போதும் ஏராளம் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த தண்டனையை கொடுக்கலாம்: நாடக இயக்குநர் ப்ரஸன்னா ராமஸ்வாமி

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநில அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க என்ன செய்யப்போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவோ பகுதியைச் சேர்ந்த, பாலியல் பாதிப்புக்குள்ளான இளம் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக் காட்டி தனது ட்விட்டரில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.



ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி தெரிவித்ததாவது, “உன்னாவில் ஏற்கெனவே நடந்த சம்பவத்தில் கொண்டு அரசாங்கம் ஏன் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை. அப்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்த காவல்துறை அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாளுக்கு நாள் உ.பி.யில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான வன்குற்றங்களைத் தடுக்க அரசாங்கம் என்ன செய்யப் போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மருத்துவமனையில் இருந்தபோது, அந்த இளம்பெண் தன்னைக் காப்பாற்றக்கோரிய சம்பவத்தை விளக்கும் ஊடகச் செய்தியையும் பகிர்ந்து தனது ட்வீட்களைப் பதிவு செய்துள்ளார்.

அடுத்த செய்தி