ஆப்நகரம்

குஜராத் மாநில கூட்டுறவு வங்கிகளில் விசாரணை

குஜராத் மாநில கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TNN 8 Jan 2017, 9:37 pm
அகமதாபாத்: குஜராத் மாநில கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil probe on gujarat society banks
குஜராத் மாநில கூட்டுறவு வங்கிகளில் விசாரணை


கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என மத்திய அரசு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று திடீரென அதிரடியாக அறிவித்தது. மாற்று வழிகளை மத்திய அரசு அறிவித்திருந்தாலும், சில்லறை தட்டுப்பாடு, ஏடிஎம்-களில் போதிய பணம் இல்லாத சூழல், வங்கிகளில் நீண்ட வரிசை, அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற போதிலும், குறுக்கு வழிகளில் வங்கி அதிகாரிகள் துணையுடன் முறையற்ற பணங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. அதேபோல், வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணம் தொடர்பாகவும் மத்திய அரசு விசாரணை மேற்கொண்டும் வருகிறது.

இந்நிலையில், பணமதிப்பிழக்க நடவடிக்கைக்கு பின்னர், குஜராத் மாநிலம் ராஜ்கோட் கூட்டுறவு வங்கியில் ரூ.871 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கடமான இந்த அதிக அளவிலான டெபாசிட் பணம் குறித்து வருமான வரித்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி