ஆப்நகரம்

அமைச்சருக்கு எதிராக போராட்டம்: பாஜக

தலைநகர் தில்லியில் அமைச்சர் குறித்த ஆபாச குறுந்தகடு வெளியான விவகாரத்தில் அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்துள்ளது.

TNN 1 Sep 2016, 11:51 am
புதுதில்லி: தலைநகர் தில்லியில் அமைச்சர் குறித்த ஆபாச குறுந்தகடு வெளியான விவகாரத்தில் அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்துள்ளது.
Samayam Tamil protest against sacked aap minister bjp
அமைச்சருக்கு எதிராக போராட்டம்: பாஜக


தில்லி குழந்தைகள் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் சந்தீப் குமார் குறித்த ஆபாச குறுந்தகடு நேற்று இரவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த குறுந்தகடில் அமைச்சர், பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகளும், புகைப்படங்களும் இருந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அமைச்சரை நீக்கியது தொடர்பான அறிவிப்பை கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டார். கடந்த 2015-ஆம் ஆண்டு, தில்லியில் ஆம்ஆத்மி அரசு பொறுப்பேற்ற பிறகு பதவி நீக்கம் செய்யப்படும் 3-வது அமைச்சர் சந்தீப் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ஆசிம் அகமது கான் ஊழல் புகார்கள் காரணமாகவும், ஜிதேந்தர் சிங் டோமர் போலி கல்வி சான்றிதழ் விவகாரம் தொடர்பாகவும் பதவிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அமைச்சரின் ஆபாச சிடி வெளியான விவகாரம் தொடர்பாக சந்தீப் குமாரை எதிர்த்து தில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் வீடு முன் இன்று போராட்டம் நடத்த போவதாக பாஜக அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி