ஆப்நகரம்

5 பில்லியன் டாலர் முதலீடு - 50,000 வேலைவாய்ப்பு; சலுகைகளை வாரி வழங்கும் புதுவை முதல்வர்!

புதுச்சேரி: புதிய திட்டங்கள் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Jan 2019, 10:28 pm
புதுச்சேரியில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நிதி ஆயோக் அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள், தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் உடன் புதுச்சேரி அரசு முன்னோட்ட மாநாட்டை நடத்தியது.
Samayam Tamil Narayanasamy


இதில் தகவல் தொழில் நுட்ப பூங்கா, ஐடி நிறுவனங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் ஆரம்பிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் மொபைல், மின்னணு தொழிற்சாலைகள் தொடங்க தொழில் முனைவோர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அடுத்த 5 ஆண்டுகளில் 5 பில்லியன் டாலர் முதலீட்டில் தொழிற்சாலைகள் துவங்க திட்டம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே இந்த திட்டத்திற்கு அரசு உடனடியாக அனுமதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரி அரசின் நோக்கம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்களை அதிக அளவில் கொண்டு வருவதாகும்.

ரவுடிகளின் மாமுல் தொல்லையால் தொழிலதிபர்கள் புதுச்சேரியில் தொழில் தொடங்க தயக்கம் காட்டுகின்றனர். இனிமேல் புதிய தொழிற்சாலை தொடங்குபவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார்.

அடுத்த செய்தி