ஆப்நகரம்

புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் 4வது நாளாக வேலைநிறுத்தம்!

நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி,புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 4வது நாளாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Samayam Tamil 28 Oct 2018, 1:19 pm
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்று 4வது நாளாக வேலைநிறுத்த பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil pondy
புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் 4வது நாளாக வேலைநிறுத்தம்!


புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் 850-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்க திரும்ப வேண்டும் என்றும், மீறும் நிரந்தர ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கமும் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் தொழிலாளர்கள் தொடர்ந்து இன்று 4வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு தினமும் ரூ. 13 லட்சம் இழப்பு ஏற்பட்டு வருவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி