ஆப்நகரம்

புதுவையில் யோகா தின விருது: ஆளுநர் கிரண்பேடி அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் யோகாசனத்தில் சிறந்து விளங்கும் பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அமைப்புகளை டேஹ்ர்வு செய்து அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

TNN 21 Jun 2016, 6:17 pm
துச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் யோகாசனத்தில் சிறந்து விளங்கும் பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அமைப்புகளை டேஹ்ர்வு செய்து அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil puducherry governor announced yoga day award
புதுவையில் யோகா தின விருது: ஆளுநர் கிரண்பேடி அறிவிப்பு


உலகம் முழுவதும் இரண்டாவது சர்வதேச யோகா தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்னைளியில், புதுச்சேரியில் காலை கடற்கரை சாலை அருகே நடைபெற்ற யோகாசன பயிற்சி நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கலந்துக் கொண்டார். அவரது தலைமையில் 4,500க்கும் மேற்பட்ட பள்ளி,கல்லூரி மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கம்பன் கலையரங்கில் குறும்படம் மூலம் யோகாசனம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணைநிலை ஆளுநர் கிரண்பேடி யோகாசனம் பற்றி உரையாடினார்.

அதில் பேசிய கிரண்பேடி,'யோகா ஆரோக்கியமான நீண்ட ஆயுளை வழங்கும், இதனை பள்ளி மாணவர்களாகிய நீங்கள் கற்றுக்கொள்ள இதுவே சரியான நேரம் என கூறினார். மேலும், இனி வரும் ஒவ்வொரு சர்வதேச யோகா தினத்தன்று, யோகாசனத்தில் சிறந்து விளங்கும் பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் துறைகளை தேர்வு செய்து மாநில அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், பிரதமர் மோடி அறிவித்துள்ள யோகாவுக்கான தேசிய விருது போல், மாநில விருதுகளும் வழங்கப்படும் என கிரண்பேடி கூறினார். இவ்விழாவில், பள்ளி மாணவர்களுடன் சுகாதாரத்துறை இயக்குனர் ராமன், சுற்றுலாத்துறை இயக்குனர் முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

அடுத்த செய்தி