ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு ரொக்க ஊதியம் கிடையாது: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்கப்படாது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

TNN 30 Nov 2016, 4:14 pm
புதுச்சேரி: அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்கப்படாது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil puducherry governor kiren bedi said no cash amount for govt employees
அரசு ஊழியர்களுக்கு ரொக்க ஊதியம் கிடையாது: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி


தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு இன்று அவரவர் வங்கிக்கணக்கில் சம்பளப் பணம் போடப்பட்டுள்ளது. இதில் ரூ.2,500 மட்டுமே ஏ.டி.எம் மூலம் எடுக்க முடியும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். முன்னதாக அரசு ஊழியர்கள் சம்பளத்தில் ரூ.10 ஆயிரம் ரொக்கமாக வழங்க அனுமதிக்குமாறு ரிசர்வ் வங்கி ஊழியர்களிடம் மத்திய அரசு வலியுறுத்தியது.

ஆனால் ரிசர்வ் வங்கி அதற்கு மறுப்பு தெரிவித்தது. இதனால் மாநில அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. அனைத்து மாநிலங்களிலும் ஊழியர்களுக்கு வங்கியில் இன்று சம்பள பணம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பணம் கையிருப்பில் உள்ள போக்குவரத்து துறையில் மட்டும், ஊழியர்களுக்கு ரூ.3000 முன்பணம் வழங்கப்படுகிறது.

இதற்கிடையில் புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். ரொக்கமாக சம்பள பணம் வழங்கப்படாது என்றும், ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைக்கு தயாராக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Puducherry Governor Kiren Bedi said no cash amount for Govt Employees.

அடுத்த செய்தி