ஆப்நகரம்

இரவு நேர ஊரடங்கு: வெளியானது முக்கிய அறிவிப்பு!

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு தொடர்பாக மாநில அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 19 Nov 2020, 11:18 am
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. பின்னர் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்று காலை நிலவரப்படி 36,465 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 35,152 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். 608 பேர் உயிரிழந்துள்ளனர். 705 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய்த்தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் 3.7 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Samayam Tamil Night Curfew


இம்மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதையொட்டி பல்வேறு கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, புதுச்சேரியில் அமலில் இருந்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான ஊரடங்கு திரும்ப பெறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ள ஆட்சியர் டி.அருண், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதின் ஒரு அங்கமாக இரவு நேர ஊரடங்கு திரும்பப் பெறப்படுகிறது.

தீபாவளிக்கு எகிறி அடித்த கொரோனா: பீதியில் பொது மக்கள்!

தொழிற்சாலைகள், கடைகள், தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், தியேட்டர்கள், பார்கள் உள்ளிட்டவை அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம். புதுச்சேரி கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் அனுமதிக்கப்படுவர்.

பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், போதிய சரீர இடைவெளியை பின்பற்றுதல், கை சுகாதாரம் ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி