ஆப்நகரம்

புதுச்சேரி: துணைநிலை கவர்னருடன் அதிமுக எம்எல்ஏ மோதல்: வேர்த்துக் கொட்டிய கிரண்பேடி

புதுச்சேரியில் துணைநிலை கவர்னர் கிரண்பேடியுடன் அதிமுக எம்எல்ஏ அன்பழகன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Oct 2018, 4:16 pm
புதுச்சேரியில் துணைநிலை கவர்னர் கிரண்பேடியுடன் அதிமுக எம்எல்ஏ அன்பழகன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil kiranbedi angry


புதுச்சேரி உப்பளத்தில் இன்று காலை ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 150வது காந்தி ஜெயந்தி விழா நடத்தப்பட்டது. இதில் துணைநிலை கவர்னர் கிரண்பேடி, அதிமுக, காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் மைக்கில் பேசிய அதிமுக எம்எல்ஏ அன்பழகன், அவருடைய தொகுதியில் அரசு திட்டங்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், ஒன்றுமே நிறைவேற்றப்பட்டவில்லை என்றும் கூறினார். மேலும், கிடப்பில் போடப்பட்ட திட்டங்களையும் ஆவேசமாக பட்டியலிட்டார்.

எம்எல்ஏ அன்பழகனின் இந்த ஆவேசப் பேச்சைக் கேட்ட கிரண்பேடி, அவருக்கு அருகில் வந்து பேசுவதை நிறுத்தும்படியும், பிறகு பேசிக்கொள்ளலாம் என்று சமாதானப்படுத்தினார். ஆனால், அதை கேட்காத எம்எல்ஏ அன்பழகன், தொடர்ந்து கிரண்பேடி அரசை விமர்சித்துப் பேசினார்.

இதனால் அதிருப்தியடைந்த கவர்னர் கிரண்பேடி, மைக்கை ஆப் செய்யும்படி, ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மைக் ஆப் செய்யப்பட்டது. கிரண்பேடியின் இந்த நடவடிக்கை அன்பழகனுக்கு மேலும் ஆத்திரம் ஏற்படுத்தியது. உடனே, கிரண்பேடியுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்எல்ஏ பேசிக்கொண்டிருக்கும் போது, நீங்கள் எப்படி மைக் ஆப் செய்யலாம். இது தவறான விஷயம். நீங்கள் தவறு செய்கிறீர்கள். இவ்வாறு செயல்பட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


இதில் வேர்த்துக்கொட்டிய கிரண்பேடி, அன்பழகனை மேடையில் இருந்து வெளியேறும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு அன்ப மேடையில் இருந்து வெளியேறும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு அன்பழகன்,’நீங்கள் வெளியேறுங்கள்’ என்று சைகையில் பேசினார். கவர்னர் கிரண்பேடி- அதிமுக எம்எல்ஏ அன்பழகனின் இந்த மோதல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி