ஆப்நகரம்

புதுச்சேரியில் 144 தடை ரத்து: கலெக்டர் உத்தரவு!

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Nov 2020, 4:32 pm

அதி தீவிர புயலான நிவர் நேற்று இரவு 11.30 மணியளவில் கரையை கடக்க தொடங்கியது. நள்ளிரவு 2.30 மணி வரையில் கரையை கடக்கும் நிகழ்வு நடைபெற்றது.
Samayam Tamil புதுச்சேரி


புயலால் பல இடங்களில் நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், வாழை, கரும்பு உள்ளிட்ட ஏராளமான பயிர்கள் சேதடைந்துள்ளன.

நிவர் புயல் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. புதுச்சேரியில் இன்னும் பெரும்பாலான இடங்களில் நீர் தேங்கியுள்ளது.

நிவர் பாதிப்பு: கடலூரில் முதல்வர் பழனிசாமி ஆய்வு!

பாதுகாப்பு கருதி மக்கள் அவரவர் வீட்டிலேயே இருக்கும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, 144 தடை உத்தரவு இன்று மாலை வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், திடீரென 144 தடை உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி