ஆப்நகரம்

மோடிதான் எங்கள் ராவணன்: தீயிட்டு கொளுத்திய விவசாயிகள்!

தசரா பண்டிகையை முன்னிட்டு ராவணன் உருவபொம்மையை எரிப்பதற்கு பதில் பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள், கார்பரேட் நிறுவனத் தலைவர்களின் கொடும்பாவியை பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 26 Oct 2020, 9:41 pm
விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த மூன்று வேளாண் மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் இந்த மசோதாக்கள் சட்டவடிவம் பெற்றுள்ளன.
Samayam Tamil கொளுத்தப்பட்ட கொடும்பாவி
கொளுத்தப்பட்ட கொடும்பாவி


இந்த சட்டங்களில் விவசாயிகளை பாதிக்கக்கூடிய அம்சங்கள் இருப்பதாக நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டு நிறுவனங்களும், கார்பரேட் நிறுவனங்களும்தான் இந்த மசோதாக்களின் மூலம் பயன்பெறுவர் என்றும் குற்றசாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், நவராத்திரி, தசரா பண்டிகைகள் வட மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா பண்டிகையின் போது வட இந்தியாவில் ராவணன் உருவபொம்மையை எரிப்பது வழக்கம். இதற்காக பல அடி உயரத்தில் ராவணன் பொம்மைகள் வைக்கப்பட்டு விழாவின் முடிவில் எரிக்கப்படும்.

தந்தையின் ஊழலை பேச மறுக்கும் தேஜஸ்வி யாதவ்: பாஜக சாடல்!

இந்த நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களின் படங்கள், அந்த சட்டங்களால் கார்பரேட் நிறுவனங்கள் ஆதாயம் அடைவதை குறிக்கும் வகையில் அம்பானி, அதானி உள்ளிட்ட கார்பரேட் நிறுவனத் தலைவர்களின் கொடும்பாவியை பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் எரித்தனர். பாரதிய கிஸான் யூனியன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு ஏராளமானோர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி