ஆப்நகரம்

70% தான் ஃபீஸ் வாங்கணும்: பள்ளிகளுக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் அதிரடி

பள்ளிகள் வசூல் செய்ய வேண்டியகல்விக்கட்டணத்தை 70 சதவீதமாக குறைத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 May 2020, 10:44 am
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 4 கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வரும் 31ஆம் தேதியுடன் 4ஆம் கட்ட ஊர்டங்கு நிறைவு பெறுகிறது. இந்நிலையில், ஜூன் மாதம் தொடங்குவதால் பள்ளிகளும் திறகப்பட ஆயத்தமாகி வருகின்றன.
Samayam Tamil Punjab-Haryana-High-Court


பொருளாதார நெருக்கடி இருக்கும் இந்தச் சமயத்தில் பள்ளிகளுக்கு கட்ட வேண்டிய கல்விக்கட்டணம் உட்பட இன்னபிற இதரக் கட்டணங்கள் ஒவ்வோரு பெற்றோருக்கும் பெரும் சவாலாக இருக்கப் போவதாக கல்வியாளர்கள் பலரும் தெரிவித்து வந்தனர்

இந்நிலையில், பள்ளிக்கூடங்கள் இயங்கத் தொடங்கும் பட்சத்தில் மாணவர்கள கட்ட வேண்டிய மொத்த கட்டணத்தொகையில் 70 சதவிகிதம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று பஞ்சாப் மற்றும் ஹரியான உயர்நீதிமன்றங்கள் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளன.

சில நாட்களுக்கு முன்பு பல பள்ளிகள் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்துவதைத் தொடரும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாயின. இதனைத் தொடர்ந்து, “அப்படித் தொடரும் பட்சத்தில் மாணவர்களிடம் பாடம் நடத்துவதற்கான கட்டணம் தவிர்த்த வேறெந்தக் கட்டணமும் பள்ளிகள் வசூலிக்கக்கூடாது” என்று அரசு கடந்த மே 14ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், ஜூன் மாதம் தொடங்கவிருப்பதையடுத்து மேலும் சில பள்ளிகள் திறக்கப்படலாம், அவை இயங்குவது குறித்த வாதப் பிரதிவாதங்கள் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்படலாம். இப்படியியிருக்கும் நிலையில், கட்டணத்தைக் குறைத்து வசூல் செய்யும்படி பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது மாணவர்/மாணவி கட்டவேண்டிய மொத்தத் தொகையில் 70 சதவீத பணம் மட்டும் செலுத்தினால் போதுமானது. உணவுக் கட்டணம், போக்குவரத்து கட்டணம், கூடுதல் கட்டணம், பராமரிப்பு கட்டணம் போன்ற இதர கட்டணங்களை வசூலிக்கக்கூடாது.

அதே சமயம் இதைக் காரணமாகக் காட்டி, ஆசிரியர்களின் சம்பளத்தையும் இந்த இடைபட்ட காலத்தில் குறைக்ககூடாது என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதன்பிறகு இந்த வழக்கில் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி ரித்து பெஹ்ரி கீழ்க்கண்ட உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

அதன்படி,

  • கல்விக்கட்டணத்தில் 70 சதவீதம் மட்டுமே பள்ளி நிர்வாகங்கள் வசூலிக்க வேண்டும்.
  • ஆசிரியர்களுக்கும் 70 சதவீதம் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
என்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வழக்கு மீதான விசாரணையை வரும் ஜூன் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாப், ஹரியானா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களின் பொது உயர்நீதிமன்றம் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இட்த்துடன் இதேபோன்ற அறிவிப்பு தமிழகத்திலும் வெளியாகுமா என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி