ஆப்நகரம்

பஞ்சாப் மாநிலத்தில் 1.2 லட்சம் குழந்தைகளுக்கு மதுப்பழக்கம்: ஷாக் ரிப்போர்ட்!

பஞ்சாப்பில் 1.2 லட்சம் குழந்தைகளுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 23 Feb 2019, 3:11 pm
பஞ்சாப்பில் 1.2 லட்சம் குழந்தைகளுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil images (1)


எய்ம்ஸ்யின் நேஷனல் ட்ரக் இண்டிபென்டன்ஸ் ட்ரீட்மெண்ட் சென்டர் ( National Drug Dependence Treatment Centre) சமீபத்தில் குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்கள் பற்றிய ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது.

ஆய்வில் வெளியான தகவல் பின்வருமாறு:

பஞ்சாப்பில், 10-17 வயத்திற்குள் இருக்கும் 1.2 லட்சம் குழந்தைகளுக்கு மதுபழக்கம் இருக்கிறது. குடிப்பழக்கம் அதிகம் உள்ள குழந்தைகள் இருக்கும் மாநிலத்தில் பஞ்சாப் முதலிடத்தில் இருக்கிறது. இந்த தரவரிசையில் மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

இந்த ஆய்வை மேற்கொண்ட அட்டுள் அம்பேத்கார் கூறுகையில்’குழந்தைகளிடத்தில் குடிப்பழக்கம் அதிகமாகி உள்ளது கவலை அளிப்பதாக இருக்கிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. மேலும் அவர்கள் குற்றவாளிகள்போல் நடத்தப்படுகிறார்கள்.

போதைபொருள் மற்றும் மதுபானத்தின் விற்பனையை தடுப்பது மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்காது. சாதாரண விழிப்புணர்வு பிரச்சாரங்கள் எதிர்பார்த்த மாற்றத்தை கொண்டுவராது. மேலும் அரசு இதற்கு தனி கவனம் செலுத்தி வேறு மாற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி