ஆப்நகரம்

கொல்லம் கோவில் தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியதவி அறிவிப்பு

இன்று அதிகாலையில் ஏற்பட்ட கொல்லம், பரவூர் புட்டிங்கல் கோயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு பிரதமர் மோடிநிதியுதவி அறிவித்துள்ளார்

TNN 10 Apr 2016, 10:02 am
கொல்லம்: இன்று அதிகாலையில் ஏற்பட்ட கொல்லம், பரவூர் புட்டிங்கல் கோவில் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.
Samayam Tamil puttingal kollam temple fire pm announces rs 2 lakh ex gratia to the kin of deceased and rs 50000 to critically injured
கொல்லம் கோவில் தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியதவி அறிவிப்பு


இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ஆணையில் கூறப்பட்டுள்ளதாவது, பரவூர் புட்டிங்கல் கோவில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, ரூ. 2 லட்சம் நிவாரண தொகையை மோடி அறிவித்துள்ளார். மேலும், தீ விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50000 நிவாரண தொகை வழங்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

Puttingal (Kollam) temple fire: PM announces Rs 2 lakh ex-gratia to the kin of deceased and Rs 50000 to critically injured-Govt Spox to ANI— ANI (@ANI_news) April 10, 2016

தற்போது, கொல்லம் கோவில் தீ விபத்து மீட்பு பணிகளில் முழுவீச்சாக ஈடுபட்டுள்ள கேரள முதல்வர் உம்மண் சாண்டி இன்று பகல் 3 மணிக்கு, கொல்லம் கோவில் தீ விபத்து மற்றும் நிவாரண பணிகள் குறித்து விவாதிக்க அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார்.

#puttingal temple fire: CM Oommen Chandy convenes an urgent cabinet meeting at 3PM in Kollam (Kerala).— ANI (@ANI_news) April 10, 2016

கொல்லம் தீ விபத்தால், தனது கேரள தேர்தல் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ள பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று பிற்பகலில் கொல்லம் செல்லவுள்ளார்.

Puttingal temple fire: BJP President Amit Shah cancels all his public programs scheduled in Kerala today, will visit Kollam later in the day— ANI (@ANI_news) April 10, 2016

அடுத்த செய்தி