ஆப்நகரம்

வெள்ளத்தின் மீது பாலம் கட்டி, நிவாரணப் பொருட்கள் அளித்த அதிவிரைவு மீட்பு படை - வீடியோ!

வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு, அதிவிரைவு படையினர் நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளனர்.

Samayam Tamil 18 Aug 2018, 10:49 am
பாலக்காடு: வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு, அதிவிரைவு படையினர் நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளனர்.
Samayam Tamil Kerala rescue


கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

பலர் உண்ண உணவின்றி பட்டினியால் வாடி வருகின்றனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு மங்கலம் அணை கிராமத்தில் வெள்ளத்திற்கு நடுவே பொதுமக்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய அதிவிரைவு படையினர் அங்கு விரைந்தனர்.

இதையடுத்து மரக் கட்டைகளால் பாலம் ஒன்றை உருவாக்கினர். இதனை வெள்ளத்தின் மீது பொருத்தினர். அதன் வழியே கிராம மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கினர். இதுதொடர்பாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Rapid Action Force personnel distribute relief material to stranded people in flood affected Palakkad's Mangalam Dam village.

அடுத்த செய்தி