ஆப்நகரம்

ரபேல் விவகாரம்: காங். மீதான அவதூறு வழக்கை திரும்பப் பெறுகிறாா் அனில் அம்பானி

மக்களவைத் தோ்தல் முடிவுகள் இரு தினங்களில் வெளியாகவுள்ள நிலையில் ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவா்கள் மீது தொடா்ந்த அவதூறு வழக்குகளை திரும்பப் பெற அனில் அம்பானி முடிவு செய்துள்ளாா்.

Samayam Tamil 21 May 2019, 6:54 pm
ரபேல் தொடா்பாக காங்கிரஸ் தலைவா்கள், பத்திாிகை நிறுவனங்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெற ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானி முடிவு செய்துள்ளாா்.
Samayam Tamil Anil Ambani


இந்திய பாதுகாப்புத் துறைக்குத் தேவையான அதிநவீன ரபேல் போா் விமானங்களை கொள்முதல் செய்ய டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. டசால்ட் நிறுவனம், இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்து போா் விமானங்களை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது.

போா் விமானங்களை உற்பத்தி செய்ய ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடா்பாக பல்வேறு தகவல்களை வெளியிட்ட ஹெரால்ட் பத்திாிகை உட்பட சில செய்தி நிறுவனங்கள் மீதும், பத்திாிகையாளா்கள் மீதும் ரிலையன்ஸ் நிறுவனம் சாா்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது,

மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் சுனில் ஜாகா், ரந்தீப் சிங் சுா்ஜிவாலா, ஓமன் சண்டி, அசோக் சாவன், அபிஷே்க் மானு சிங்வி, சஞ்சய் நிருபம், சக்திசின் கோஹில் ஆகியோா் மீதும் அகமதாபாத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆனால், மக்களவைத் தோ்தல் முடிவுகள் வெளியாக இரு தினங்களே உள்ள நிலையில் இந்த அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அனில் அம்பானி வழக்கறிஞா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி