ஆப்நகரம்

வீடு தேடி வந்த எம்பி பதவி; வேண்டாம் என்று சொன்ன ரகுராம் ராஜன்!

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்

TNN 27 Nov 2017, 12:30 pm
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil raghuram rajan denied the rumors of entering into politics
வீடு தேடி வந்த எம்பி பதவி; வேண்டாம் என்று சொன்ன ரகுராம் ராஜன்!


இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் தனது பதவி காலத்திற்கு பின், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி ரகுராம் ராஜனை தங்கள் கட்சியில் சேருமாறு அழைத்ததாகவும், அவருக்கு ராஜ்யசபாவில் எம்பி பதவி தருவதாக கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி கருத்து கூறிய ரகுராம் ராஜன்,”எனக்கு அரசியலில் நுழையும் எண்ணம் கிடையாது. பேராசிரியராகவே இருக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். ரகுராம் ராஜன் ஆளுநராக இருந்தபோது பணமதிப்பிழப்பு எதிராக கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Raghuram Rajan denied the rumors of entering into politics

அடுத்த செய்தி