ஆப்நகரம்

’தவறான தகவல்களின் மன்னன் மோடி’; வீடியோ போட்டு கலாய்த்த ராகுல்!

பிரதமர் மோடியை வீடியோ வெளியிட்டு ராகுல் காந்தி கலாய்த்துள்ளார்.

Samayam Tamil 4 Apr 2018, 9:14 pm
டெல்லி: பிரதமர் மோடியை வீடியோ வெளியிட்டு ராகுல் காந்தி கலாய்த்துள்ளார்.
Samayam Tamil Modi with Rahul gandhi
பிரதமர் மோடி


பெட்ரோல், டீசல் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துவிட்டது. இந்த காலகட்டத்தில் 9 தவணைகளாக உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே உற்பத்தி வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு முடியாது என்று கைவிரித்துவிட்டது.

இதற்கிடையில் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

சுதந்திர சந்தை விலை நிர்ணயம் எப்போதும் கடைபிடிக்கப்படும். ஒருவேளை பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வரப்பட்டால் பயனாளர்கள் பயன் அடைவார்கள் என்றார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘தவறான தகவல்களின் மன்னன்’ மோடி என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது என்று பேசுகிறார். அதைக் கேட்டு சல்மான் கான் சிரிக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Rahul Gandhi attacks PM Modi on Petrol diesel price.

அடுத்த செய்தி