ஆப்நகரம்

வாஜ்பாய் தலைமையிலான அரசை விமர்சித்த ராகுல்

ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை இந்திய சிறையிலிருந்து விடுவித்தது யார் என்பதை நாட்டிற்கு செல்வீர்களா என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 9 Mar 2019, 7:41 pm
ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை இந்திய சிறையிலிருந்து விடுவித்தது யார் என்பதை நாட்டிற்கு செல்வீர்களா என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil rahul


கர்நாடக மாநிலம், ஹவேரியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தத் தாக்குதலுக்கு யார் காரணம்; ஒரு சிறிய கேள்வி கேட்கிறேன். சிஆர்பிஎப் வீரர்களை யார் கொலை செய்தது அந்தத் தீவிரவாத அமைப்பின் தலைவர் பெயர் என்ன?. அவர் பெயர் மசூத் அசார். அவரை இந்திய சிறையிலிருந்து யார் விடுவித்தார்கள் என்பதை பிரதமர் மோடி புரியவைக்க வேண்டும்.

இதைப் பற்றி ஏன் பிரதமர் பேசுவதில்லை. சிஆர்பிஎப் வீரர்களை கொலை செய்த தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாஜக மூலம்தான் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் சென்றார். மசூத் அசாரை பாகிஸ்தானுக்கு யார் அனுப்பி வைத்தது என்று மக்களுக்கு மோடி தெளிவுபடுத்த வேண்டும். பிரதமர் மோடி ஊழல் குறித்து பேசுகிறார். ஆனால், அவர் ஊழல்வாதி என்பது தேசத்துக்கே தெரியும். மேக் இன் இந்தியா, ஸ்டான்ட் அப் இந்தியா, ஸிட் டவுன் இந்தியா எனக் கூறி கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி மக்களை ஏமாற்றி வருகிறார் எனப் பேசினார்.

முன்னதாக, கடந்த 1999-ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியிலிருந்தது. அப்போது, ஐசி-814 என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் கடத்தப்பட்டது. அப்போது காந்தகாரில் தீவிரவாதிகள் இந்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பயணிகளை பத்திரமாக விடுவிக்க வேண்டுமானால் இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மசூத் அசாரை விடுவிக்க வேண்டும் என்றனர். இதையடுத்து அப்போதைய பாஜக அரசு மசூத் அசாரை விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி