ஆப்நகரம்

சோனியாவை அழைத்துவர ராகுல் காந்தி அமெரிக்கா பயணம்

அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இந்தியா அழைத்து வருவதற்காக, அவரது மகனும், காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி புறப்பட்டுச் சென்றார்.

TNN 17 Mar 2017, 4:55 am
அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இந்தியா அழைத்து வருவதற்காக, அவரது மகனும், காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி புறப்பட்டுச் சென்றார்.
Samayam Tamil rahul gandhi leaves for us to bring sonia back congress
சோனியாவை அழைத்துவர ராகுல் காந்தி அமெரிக்கா பயணம்


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உடல்நலக்குறைவு காரணமாக, தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். சில மாதங்களுக்கு முன்பாக, உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, சோனியாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உடனடியாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஒரு வார சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். இதையடுத்து, அவ்வப்போது சில வார இடைவெளியில் அமெரிக்கா சென்று, மருத்துவப் பரிசோதனை மற்றும் அத்தியாவசிய சிகிச்சைகள் செய்துகொண்டு, இந்தியா திரும்புவதை சோனியா காந்தி வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இதன்படி, தற்போது அமெரிக்கா சென்றுள்ள சோனியா காந்தியை, மீண்டும் இந்தியா அழைத்து வருவதற்காக, ராகுல் காந்தி நேற்றிரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். சோனியா நல்ல உடல்நலத்துடன் உள்ளார் என்றும், அவர் நாடு திரும்பியதும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Congress vice-president Rahul Gandhi left for the US on Thursday to be with his mother, party president Sonia Gandhi, who is there for a medical checkup.

அடுத்த செய்தி